மேலும் செய்திகள்
தர்மபுரியில் புத்தொழில் கண்காட்சி
2 hour(s) ago
தக்காளி விலை உயர்வு கிலோ ரூ.50க்கு விற்பனை
2 hour(s) ago
கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு
2 hour(s) ago
பா.ஜ., -- ஓ.பி.சி., அணி ஆலோசனை
2 hour(s) ago
நல்லம்பள்ளி, நல்லம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, 1.50 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனையாகின. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் வாரந்தோறும், செவ்வாய்கிழமைகளில் வாரச்சந்தை நடக்கிறது. அதன்படி நேற்று அதிகாலை முதல் ஆட்டுச் சந்தை கூடியது. இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆடுகளை வாங்கவும், விற்கவும் வந்திருந்தனர். ஆடி மாத தொடக்கத்தில் இருந்து, கோவில் திருவிழாக்கள் நடந்து வருவதால், கோவில்களில் நேர்த்திக்கடன் செலுத்துதல் மற்றும் இறைச்சி தேவை அதிகரித்து. நேற்று நடந்த நல்லம்பள்ளி வாரச்சந்தையில், 800 ஆடுகளுக்கு மேல், விற்பனைக்கு வந்திருந்தது. இதில், ஆடுகளின் எடை அளவை பெறுத்து, 4,000 -முதல், 30,000 ரூபாய் வரை விற்பனையாகின. ஆடுகள் வரத்து அதிகரிப்பு மற்றும் விற்பனையால், நேற்று நடந்த ஆட்டுச் சந்தையில், 1.50 கோடி ரூபாய் அளவுக்கு, ஆடுகள் விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago