உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கூட்டுறவு வங்கியில் கையாடல் உதவி மேலாளர் சஸ்பெண்ட்

கூட்டுறவு வங்கியில் கையாடல் உதவி மேலாளர் சஸ்பெண்ட்

தர்மபுரி:தர்மபுரி நெடுஞ்சாலை ரோடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 60. இவர், தர்மபுரி கூட்டுறவு நகர வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவர், வங்கியில் பொதுமக்கள் டிபாசிட் செய்த தொகையில், போலி வவுச்சர்களை வைத்து, 3.50 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்துள்ளார். இதேபோல், தன் உறவினர்கள் பெயரில் போலி ஆவணங்களை வைத்து, 24 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்துள்ளார். இதுதொடர்பாக, தர்மபுரி சரக துணைப்பதிவாளர் ராஜேந்திரன் உத்தரவின் படி, கூட்டுறவுத்துறை அதிகாரி கவுரி விசாரணையில், கோவிந்தசாமி போலி ஆவணங்கள் வாயிலாக பணம் கையாடல் செய்தது தெரிந்தது. அதன்படி அவரை, தர்மபுரி கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் பிரேம், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை