உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விளையாட்டு மைதானத்தில் தெரு நாய்களால் தொல்லை

விளையாட்டு மைதானத்தில் தெரு நாய்களால் தொல்லை

அரூர்;அரூரில், திரு.வி.க., நகர், வர்ணதீர்த்தம், பாட்சாபேட்டை போன்ற பகுதிகளில், கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள், சாலையின் மையத்தில் படுத்து கொள்வதால், டூவீலரில் செல்வோர் விபத்தை சந்திக்கின்றனர். சாலையில் நடந்து செல்வோரை கடிப்பது, குழந்தைகளை துரத்துவது, இறைச்சிக்கடை உள்ள பகுதியில் உணவை தேடி அங்கும், இங்கும் ஓடுவது என, தொடர்ந்து பொதுமக்களுக்கு நாய்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.அரூர், சிறு விளையாட்டு அரங்கில் கூட்டமாக சேரும் நாய்கள், திடீரென்று குறுக்கும், நெடுக்கும் ஓடுவதால், நடை பயிற்சி மேற்கொள்ள வருவோர், பீதியுடன் செல்ல வேண்டிய நிலையுள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை