உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அடிப்படை வசதிகளை மேம்படுத்த மலைவாழ் மக்கள் வேண்டுகோள்

அடிப்படை வசதிகளை மேம்படுத்த மலைவாழ் மக்கள் வேண்டுகோள்

அரூர்;தர்மபுரி மாவட்டம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய, 2 தாலுகாவிற்கு உட்பட்ட, சித்தேரி, கலசப்பாடி, சிட்லிங், காரப்பாடி, வாச்சாத்தி, ஏ.கே.தண்டா, சேலுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் சாலை, மின்சாரம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவைகள் போதியளவில் இல்லை. இதனால், மலைவாழ் பழங்குடியின மக்கள் கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின், தங்கிய நிலையில் உள்ளனர். மேலும், பழங்குடியின இளைஞர்கள், பிழைப்புக்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்கின்றனர். எனவே, அரசு சார்பில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மலைவாழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ