உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பணம், நகை மாயம் மனைவி மீது கணவன் புகார்

பணம், நகை மாயம் மனைவி மீது கணவன் புகார்

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த, மாரப்பகவுண்டர் கிராமத்தை சேர்ந்த விவசாயி மூர்த்தி, 55; இவரது மனைவி செல்வி, 40; இவர்களுக்கு, 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, கணவன் மனைவி இருவரும் கடந்த, 15 ஆண்டாக பிரிந்து வாழ்ந்தனர். இதில், சேர்ந்து வாழ்வதாக கூறி, கடந்த ஜூன், 26 அன்று மனைவி மற்றும் மகன்கள் வீட்டிற்கு வந்தனர். மறுநாள் வீட்டின் லாக்கரில் இருந்த, 15 லட்சம் ரூபாய் மற்றும், 7 பவுன் நகையை எடுத்து சென்று விட்டதாக, மனைவி மீது கணவர் மூர்த்தி, காரிமங்கலம் போலீசில் அளித்த புகார் படி, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி