உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வத்தல் மலையில் மண் சரிவு

வத்தல் மலையில் மண் சரிவு

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம் வத்தல்மலையில் சின்னாங்காடு, ஒன்றியங்காடு, பால் சிலம்பு, பெரியூர், நாயக்கனுார் உள்ளிட்ட ஏழு மலை கிராமங்கள் உள்ளன. இவற்றில், 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வத்தல்மலை அடிவாரத்தில் இருந்து, மலைக்கு செல்ல, 13 கி.மீ., தொலைவுக்கு, 24 கொண்டை ஊசி வளைவுகளுடன் தார்ச்சாலை உள்ளது. மழைக்காலத்தில் சாலையில் மண் சரிவு ஏற்படுவதால், வேன், ஜீப் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், 2022 ஆக.,13 முதல் பஸ்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.சில நாட்களாக பெய்த தொடர் மழையால், வத்தல்மலையின், 4, 8, 9, 18வது கொண்டை ஊசி வளைவுகளில், நேற்று முன்தினம் மண் சரிவு ஏற்பட்டது. சில இடங்களில் பெரிய பாறைகள் சாலையோரம் உருண்டு விழுந்தன. இதனால் பெரிய அளவில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை