உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வரத்து குறைவால் மாம்பழம் விலை உயர்வு

வரத்து குறைவால் மாம்பழம் விலை உயர்வு

தர்மபுரி;பாலக்கோடு மற்றும் காரிமங்கலத்தில் விளையும் மாம்பழங்களை, கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். சாலையில் செல்லும் மக்களும் இவற்றை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். மாட்லாம்பட்டி பகுதியிலிருந்து காரிமங்கலம் வரை, சாலையோரத்தில், 100க்கும் மேற்பட்ட மாம்பழம் விற்பனை செய்யும் தற்காலிக கடைகள் உள்ளன. பெங்களூரு நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள், இங்குள்ள கடைகளில் மாம்பழங்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இதில், மல்கோவா, அல்போன்சா, செந்துாரா, பீத்தர் உள்ளிட்ட ஏராளமான வகை மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்தாண்டு மாம்பழம் வரத்து அதிகமாக இருந்தது. இதனால், ஒரு கிலோ மாம்பழம், 150 முதல், 300 ரூபாய் வரை விற்றது. இந்தாண்டு வெயில் தாக்கத்தால் மாம்பழ வரத்து இல்லை. விளைச்சலும் குறைவாக உள்ளதால், ஒரு கிலோ, 200 முதல், 400 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி