உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / முனியப்ப சுவாமி கோவிலில் முப்பூஜை

முனியப்ப சுவாமி கோவிலில் முப்பூஜை

பாலக்கோடு, தர்மபுரி, பாலக்கோடு அடுத்துள்ள பனந்தோப்பில் புள்ள முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த, 4 நாட்களுக்கு முன் துவங்கியது. இதில், மேல்தெரு, பனந்தோப்பு, வாழைத்தோட்டம், எர்ரகுட்டஹள்ளி, அமுதம் காலனி, தண்டுகாரன் கொட்டாய் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த, 100 வீட்டு பங்காளிகள் ஒன்றினைந்து முனியப்ப சுவாமிக்கு ஆடு, கோழி, பன்றி ஆகியவற்றை பலியிட்டு முப்பூசை செய்து வழிப்பட்டனர்.தொடர்ந்து, முனியப்ப சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு, அலங்காரம் நடந்தது. பாலக்கோடு முன்னாள் எம்.எல்.ஏ., மாதப்பன் உள்பட பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி