உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பச்சை, மஞ்சள் நிறத்தில் ஒகேனக்கல் குடிநீர்

பச்சை, மஞ்சள் நிறத்தில் ஒகேனக்கல் குடிநீர்

அரூர் : அரூர், மொரப்பூர் பகுதியில் பச்சை, மஞ்சள் நிறத்தில் ஒகேனக்கல் குடிநீர் வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு புளோரைடு பாதிப்பைக் குறைக்கும் வகையில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது. இந்நிலையில் மொரப்பூர் மற்றும் அரூர் ஒன்றியங்களில் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் குடிநீர் இளம்பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் வருகிறது.இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், 'கடந்த, 4 நாட்களாக ஒகேனக்கல் குடிநீர் இளம்பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் வருவதால் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், அந்த நீரால் ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் உள்ளது' என்றனர்.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'ஒகேனக்கல் நீர்வரத்து குறைந்ததால் குடிநீர் கலங்கலாக வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இப்படிதான் வருகிறது. இந்த நீரை குடிப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இது குறித்து பஞ்., நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ