மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
5 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
5 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
5 hour(s) ago
தர்மபுரி: பெரியாண்டிச்சி அம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. தர்மபுரி அருகே, அன்னசாகரத்திலுள்ள பெரியாண்டிச்சி அம்மனுக்கு கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து முதல் கால யாக பூஜை மற்றும் அஷ்டபந்தனம் சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை நடந்த நிலையில், யாகசாலையில் வைத்து பூஜை செய்த புனித நீர் அம்மன் மீது ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பெரியாண்டிச்சி அம்மனுக்கு மஹா தீபாரதனை நடந்தது.திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர்மக்கள் செய்திருந்தனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago