மேலும் செய்திகள்
அரசு குடியிருப்புகளை சீரமைக்க வேண்டுகோள்
5 hour(s) ago
தர்மபுரியில் ஓய்வூதியர் தின விழா
5 hour(s) ago
தர்மபுரியில் எஸ்.ஐ., தேர்வு 1,688 பேர் ஆப்சென்ட்
5 hour(s) ago
துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்
21-Dec-2025
பாலக்கோடு: பாலக்கோடு, பி.டி.ஓ., அலுவலகம் முன், குடிநீர் கேட்டு, 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எர்ரணஹள்ளி பஞ்., துப்பாக்கிகாரன்கொட்டாய் பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். 10 ஆண்டுகளாக ஒகேனக்கல் குடிநீர் கேட் வால்வில் வழிந்து வரும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வந்தனர், கடந்த சில நாட்களாக குடிநீர் கேட் வால்வை முழுமையாக அதிகாரிகள் மூடியதால், குடிக்க தண்ணீர் இன்றிசிரமம் அடைந்து வருவதாக கூறி, 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் பாலக்கோடு பி.டி.ஓ., அலுவலகம் முன், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாபுசுந்தரம், பி.டி.ஓ., ஜெகதீசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கடைகோடி பகுதிகளுக்கு முழுமையாக சென்றடைவது சிரமமாக உள்ளது. இடைப்பட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாக குழாய் அமைத்தும், கேட்வால்வு பகுதிகளில் குடிநீர் பிடித்து வருவதால், முழுமையாக குடிநீர் சென்றடைவதில்லை. இது போன்ற நடவடிக்கைகளை எடுக்க, தர்மபுரி கலெக்டர் உத்தரவின் பேரில், குடிநீர் கேட் வால்வு அகற்றப்பட்டுள்ளது. விரைவில் புதிய குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
21-Dec-2025