மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
6 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
6 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
6 hour(s) ago
பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த, கர்த்தாரப்பட்டி புதிய தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் அடியில் தேங்கும் மழைநீரால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை முதல், பாலக்கோடு வழியாக ராயக்கோட்டை, ஓசூர் வரை புதிய, 4 வழி தேசிய நெடுஞ்சாலை பணி நடக்கிறது. இப்பணிகள், 90 சதவீதம் வரை முடிந்த நிலையில், இதில் அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பாலக்கோடு அடுத்த, கர்த்தாரப்பட்டி புதிய தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.இந்த மழைநீரில், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் மழைநீர் வெளியேற போதுமான கால்வாய்கள் அமைக்கப்படாததால், தண்ணீர் தேங்குகிறது. எனவே, வாகன ஓட்டிகளின் நலன்கருதி இப்பகுதியில் கால்வாய்கள் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago