உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டை சுத்தமாக வைக்க ஆர்.டி.ஓ., அறிவுரை

பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டை சுத்தமாக வைக்க ஆர்.டி.ஓ., அறிவுரை

பாப்பிரெட்டிப்பட்டி :பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பஸ் ஸ்டாண்டிலுள்ள, 2 கழிவறைகள், குழந்தைகளுக்கு பாலுாட்ட தாய்மார்கள் பயன்படுத்தக்கூடிய அறை, பயணிகள் காத்திருப்பு அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி, ஆகியவற்றை ஆய்வு செய்தார்.அப்போது அவர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் தண்ணீர் தொடர்ந்து நிரப்பப்பட வேண்டும். பஸ் ஸ்டாண்டில் முழு அளவில் குப்பையை அகற்றி சுத்தமான முறையில் பராமரிக்க வேண்டும். குழந்தைகளுக்கு பாலுாட்டும் தாய்மார்கள் பயன்படுத்தக்கூடிய அறையில் மின் விசிறி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனஅறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது, பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ