உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை

ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை

தர்மபுரி,: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியிலுள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாணவ மாணவியர், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து, சாதனை படைத்துள்ளனர். கிருஷ்ணகிரி நகரில், ராயக்கோட்டை ரோட்டிலுள்ள பள்ளி மாணவி ஸ்ரீ சுகவர்ஷினி, மாணவர் பவன்குமார், 497 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் முதலிடமும், ஜோஷினி, 496 மதிப்பெண்கள் பெற்று, 2-ம் இடமும், மேகப்பிரியா, கவியரசி, 494 மதிப்பெண் பெற்று, 3-ம் இடமும் பெற்றுள்ளனர்.கிருஷ்ணகிரி பழையபேட்டை பள்ளி மாணவி சர்வேஸ்வரி, 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாருதி யஸ்வந்த், 495 மதிப்பெண்கள் பெற்று, 2-ம் இடமும், ரம்யா, 493 மதிப்பெண்கள் பெற்று, 3-ம் இடமும் பிடித்துள்ளனர்.தர்மபுரி பள்ளியை சேர்ந்த மாணவி சவுந்தர்யா, 497 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் முதலிடமும், மிதுனா, 496 மதிப்பெண் பெற்று, 2-ம் இடமும், மாணவர் யுவன் சங்கர், 495 மதிப்பெண் பெற்று, 3-ம் இடமும் பெற்றுள்ளனர்.சாதனை படைத்த மாணவ, மாணவியரை ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் இளங்கோவன், தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குனர்கள் பிரேம் இளங்கோவன், சினேகா பிரவின், பள்ளி தலைமை செயற்பாட்டு அலுவலர் சந்திரபானு, பள்ளி முதன்மை முதல்வர் பிரெடரிக் சாம் , முதல்வர்கள் பத்மா, சிவகாம சுந்தரி, ஜெயசீலன் மற்றும் ஆசிரியர்கள் பொறுப்பாசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை