உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

தர்மபுரி: தர்மபுரி சி.ஐ.டி.யு., அலுவலகத்தில், தமிழ்நாடு பட்டுவளர்ச்சித்-துறை அலுவலர் சங்கத்தின், மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் வெங்கட்டேஷ் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் வினயா வரவேற்றார். சங்க மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட பொறுப்பாளர் ஸ்ரீநாத் ஆகியோர் பேசினர்.இதில், பட்டுவளர்ச்சி துறையிலுள்ள, 70 சதவீதத்திற்கும் மேற்-பட்ட இளநிலை பட்டு ஆய்வாளர் மற்றும் அமைச்சு பணியாளர் உள்ளிட்ட அனைத்து நிலை காலி பணியிடங்களை நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பட்டு நுாற்பகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தரத்தை மேம்படுத்த வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி, மத்திய திட்டங்களுக்கு இணையாக, நடவு மானியம் மற்றும் புழு வளர்ப்புமனை மானிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பட்டு பண்ணைகளின் உட்கட்டமைப்பு வச-தியை மேம்படுத்த கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் பணிக்கொடை வழங்க வேண்டும். துணை இயக்குனர் முதல் உதவி ஆய்வாளர் வரை, அனைத்து நிலை பணியிடங்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி