| ADDED : மே 30, 2024 01:24 AM
தர்மபுரி, தர்மபுரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி வட்டார பகுதிகளில் கோடை மழை பரவலாக பெய்ய துவங்கியுள்ளது. எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கோடை உழவு பணியை மேற்கொள்ள வேண்டும். தற்போது, தர்மபுரியிலுள்ள ஒருங்கிணைந்த மையம் மற்றும் கிருஷ்ணாபுரத்திலுள்ள துணை வேளாண் விரிவாக்க மையத்தில், மானாவாரி சாகுபடிக்கு உகந்த நிலக்கடலை விதைகள், உளுந்து விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்டங்கள், விதை நேர்த்தி, மருந்துகள், மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.