உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மா மரங்களை சேதப்படுத்திய யானை

மா மரங்களை சேதப்படுத்திய யானை

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி முனியப்பன், 55; இவருக்கு சொந்தமான, 3.5 ஏக்கர் நிலத்தில் தென்னை, மா, வாழை உள்ளிட்ட மரங்கள் வளர்த்து வந்தார். இந்நிலையில், மாங்காய் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முனியப்பன் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானை, 30க்கும் மேற்பட்ட மா மரங்கள் மற்றும் தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தியது.இது குறித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். யானைகள் வருவதை தடுக்க வன பகுதிகளில் தடுப்பு வேலி, பள்ளம் மற்றும் தண்ணீர் தொட்டி உள்ளிட்டவை இல்லாததால், தினமும் யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து, பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. பாதிப்புகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ