உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பணி நிரந்தரம் கோரி காத்திருப்பு போராட்டம்

பணி நிரந்தரம் கோரி காத்திருப்பு போராட்டம்

தர்மபுரி: பணி நிரந்தரம் மற்றும் பதவி உயர்வு கோரி, தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்தேக்கதொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில், காத்திருப்பு போராட்டம், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று நடந்தது. சங்க மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி செயலாளர் மகேஷ்வரி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் பேசினார். கிராம பஞ்.,ல், 250 ரூபாய் ஊதியத்தில் பணிபுரியும் டேங்க் ஆப்ரேட்டர்கள் மற்றும், 3 ஆண்டு பணி முடித்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை, வாரிசு வேலை, பதவி உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை