| ADDED : ஜூலை 30, 2024 03:11 AM
அரூர்: அரூர் அடுத்த வேப்பம்பட்டியை சேர்ந்தவர் முருகன், 57, கூலித்-தொழிலாளி. இவர், 2 மாடுகள் மற்றும் 10 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு ஆடு கத்தும் சத்தம் கேட்டு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த முருகன் வெளியே வந்-துள்ளார். அப்போது, வீட்டின் முன் கட்டியிருந்த, 2 ஆடுகளை, 3 பேர் பஜாஜ் பல்சர் பைக்கில் வைத்துக் கொண்டு அரூர் நோக்கி சென்றனர். கூச்சலிட்ட முருகனின் சத்தத்தை கேட்டு வந்த, உறவி-னர்கள் முருகனை பைக்கில் அழைத்துக் கொண்டு, ஆடு திருடிச் சென்றவர்களை பின் தொடர்ந்தனர். அவர்கள் ஈட்டியம்பட்டியில் ஒரு வீட்டின் முன் பைக் மற்றும் ஆடுகளை விட்டு விட்டு தப்பி-யோடினர். அவர்களை, காரல்மார்க்ஸ், சங்கர், முருகன் ஆகியோர் விரட்டி பிடிக்க முயன்ற போது, 2 பேர் தப்பிய நிலையில் வாலிபர் ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரிடம் விசாரித்ததில் அவர், அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த கலையரசன், 24, என தெரியவந்தது. அவரை அரூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்-தனர். அவரை கைது செய்த போலீசார் தப்பியோடிய, 18 வயது-டைய, 2 சிறுவர்களை தேடி வருகின்றனர்.