உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பெண்கள் இலவச பயணத்திற்கு 20 புதிய பஸ்கள்

பெண்கள் இலவச பயணத்திற்கு 20 புதிய பஸ்கள்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதுார் பஞ்.,ல் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று, 'மக்-களுடன் முதல்வர்' நிகழ்ச்சி நடக்கும் இடத்தில், முன்னேற்பாடு பணிகளை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்-னீர்செல்வம், தர்மபுரி கலெக்டர் சாந்தி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்-கொண்டார்.இது குறித்து, அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது: நல்லம்-பள்ளி அடுத்த பாளையம்புதுார் பஞ்.,ல், ஊரக பகுதிகளில், 'மக்க-ளுடன் முதல்வர்' திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்து, தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு முடிவுற்ற திட்-டப்பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.இதில், பெண்கள் இலவச பயணம் திட்டத்திற்காக, தற்போது இயங்கி வரும் பழைய பஸ்களுக்கு பதிலாக, 20 புதிய டவுன் பஸ்களை கொடியசைத்து துவக்கி வைக்கிறார். மேலும், தர்மபுரி மாவட்ட விவசாயிகள், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளின் அடிப்படையில் பல்வேறு புதிய வளர்ச்சி திட்-டங்களை அறிவிக்க உள்ளார். இதில், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ., முதல்வரின் முகவரி சிறப்பு அலுவலர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்விழாவில், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ