உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வேப்பனஹள்ளி அருகே 3 யானைகள் முகாம்

வேப்பனஹள்ளி அருகே 3 யானைகள் முகாம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனள்ளி அருகே உள்ள நேரலகிரி, கொங்கனப்பள்ளி, சிகரமாகனப்பள்ளி வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களை, 3 யானைகள் சேதப்படுத்தி வந்தன. அவற்றை கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடகா மற்றும் ஆந்திர வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டினர். நேற்று, 3 யானைகளும் மீண்டும் தமிழக எல்லையிலுள்ள கொட்டாயூர் வனப்பகுதியில் முகாமிட்டு, வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்ளை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.மேலும், வனப்பகுதியை ஒட்டிய கொல்லப்பள்ளி, காசரிகானப்பள்ளி, நேரலகிரி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கும், விவசாயிகளுக்கும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இரவில் விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டாம், அங்கு தங்க வேண்டாம், வனப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ள வனத்துறையினர், யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ