மேலும் செய்திகள்
வாலிபரின் பைக் திருட்டு
23-Aug-2025
தர்மபுரி தர்மபுரி அடுத்த, பழைய தர்மபுரியை சேர்ந்தவர் பிரபாவதி, 26. இவர் பி.எட்., படித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். பெற்றோர் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.இண்டூர் அருகே, குப்புசெட்டிபட்டியை சேர்ந்த மதுமிதா, 23. இவருக்கு நாளை திருமண நிச்சயதார்த்தம் செய்ய பெற்றோர் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், மதுமிதா மாயமானார். பெற்றோர் புகார் படி, இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர். மாரண்டஹள்ளி அடுத்த, நம்மாண்டஹள்ளியை சேர்ந்தவர் அலமேலு, 25. இவர், நேற்று முன்தினம் மாயமானார். பெற்றோர் புகார் படி, பஞ்சபள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Aug-2025