உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரி லோக்சபா தொகுதியில் பதற்றமான 320 ஓட்டுச்சாவடிகள்

தர்மபுரி லோக்சபா தொகுதியில் பதற்றமான 320 ஓட்டுச்சாவடிகள்

தர்மபுரி: தர்மபுரி லோக்சபா தொகுதி, இலக்கியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பதற்றமான ஓட்டுச்சாவடி மையத்தில், இணையவழி கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணியை, மாவட்ட தேர்தல் அலுவலர் சாந்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.இது குறித்து அவர் தெரிவித்ததாவது:தர்மபுரி லோக்சபா தொகுதியில், 320 பதற்றமான ஓட்டுச்சாவடிகள் உள்ளன. தர்மபுரி மாவட்டத்தில்லுள்ள, 5 சட்டசபை தொகுதிகளில், 1,489 ஓட்டுச்சாவடிகளில், 967 ஓட்டுச்சாவடி மையங்களில் இணையவழி கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி நடந்து வருகிறது. பதற்றமான ஓட்டுச்சாவடிகள் அனைத்திலும், 'சிசிடிவி' கேமரா மூலம், மாநில தேர்தல் ஆணையர் அலுவலகம் மற்றும் மாவட்ட தேர்தல் பொதுப்பார்வையாளர்கள், மாவட்ட கலெக்டர் ஆகியோர், நேரடியாக கண்காணிக்கும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், தேர்தல் நுண் பார்வையாளர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை