உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கிணற்றில் பாய்ந்த கார் உயிர் தப்பிய 6 பேர்

கிணற்றில் பாய்ந்த கார் உயிர் தப்பிய 6 பேர்

தர்மபுரி: தர்மபுரி அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார், கிணற்றுக்குள் பாய்ந்ததில், அதிர்ஷ்டவசமாக காரிலிருந்த, 6 பேர் உயிர் தப்பினர்.தர்மபுரியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 45; அவர் மனைவி மணிமேகலை, 35; இவர்களின் உறவினர்கள் உட்பட, 6 பேர் நேற்று மாலை மஹிந்திரா பொலிரோ காரில், பாடியிலிருந்து புலிக்கரைக்கு சென்றனர். புலிக்கரை அருகே சென்ற போது, டிரைவரின் கட்டுபாட்டை இழந்த கார், சாலையோர கிணற்றில் பாய்ந்தது. கிணற்றின் உள்ளே பக்கவாட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த, 6 பேர் அதிஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அங்கிருந்த மக்கள், கார் இடிபாடுகளில் இருந்த அனைவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதிக்கோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை