தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தரும், தமிழக முதல்வருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்க கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும் என, தர்மபுரி மாவட்ட செயலாளர்கள் கிழக்கு தடங்கம் சுப்ரமணி, மேற்கு பழனியப்பன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தை மையமாக கொண்டு, பல்வேறு மக்கள் நல திட்டங்களை உருவாக்கி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 'மக்களுடன் முதல்வர்' என்ற மகத்தான திட்டத்தை தொடங்கி வைக்க நாளை, 11ம் தேதி வியாழக்கிழமையன்று பாளையம்புதுார் பஞ்., உட்பட்ட, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு வருகை தர உள்ளார். அது சமயம், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை படி, மாவட்ட எல்லையான தொப்பூர் முதல் வழிநெடுக, கட்சியினர் திரளாக நின்று, முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக தோழர்கள், பெருந்திரளாக கலந்து கொண்டு, சிறப்பான வரவேற்பு அளிக்க கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.