உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தடுப்பு துறை அலுவலர்களுக்கு ஆலோசனை

கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தடுப்பு துறை அலுவலர்களுக்கு ஆலோசனை

தர்மபுரி: கோடையில் கோழிகளுக்கு ஏற்படும் பறவை காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்தில், கலெக்டர் சாந்தி தலைமை வகித்து பேசியதாவது: அண்டை மாநிலமான கேரளா மற்றும் ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளில், வாத்து, கோழிகளில் பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்படுவதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் கோழி மற்றும் வாத்துகளுக்கு, பறவை காய்ச்சல் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களை சேர்ந்த கோழி மற்றும் வாத்து வளர்ப்போர், அவற்றிற்கு ஏதோனும் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது இறப்பு ஏற்பட்டாலோ அருகிலுள்ள பஞ்., பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்வர். எனவே, இவற்றை வளர்க்கும் கால்நடை விவசாயிகள், அருகிலுள்ள கால்நடை நிலையங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவுரவ்குமார், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் சுவாமிநாதன், ஏ.டி.எஸ்.பி., இளங்கோவன் உட்பட கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ