உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அண்ணாதுரை நினைவு நாள் அனுசரிப்பு

அண்ணாதுரை நினைவு நாள் அனுசரிப்பு

தர்மபுரி: தர்மபுரியில், பல்வேறு கட்சிகளின் சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 55வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட, தி.மு.க., சார்பில் தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகிலிருந்து அமைதி ஊர்வலம் நடந்தது. பின், தர்மபுரி, 4 ரோட்டிலுள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை வகித்தார்.இதேபோல், தர்மபுரி மாவட்ட, நகர, அ.தி.மு.க., சார்பில், மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலும், ம.தி.மு.க., சார்பில் நகர செயலாளர் சுப்பிரமணி தலைமையிலும், தி.க., சார்பில் பொதுக்குழு உறுப்பினர் கதிர் தலைமையிலும் மற்றும் பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் அண்ணாதுரை உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.* அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள அண்ணாதுரை சிலைக்கு, அரூர் நகர அ.தி.மு.க., செயலாளர் பாபு தலைமையில், அரூர் எம்.எல்.ஏ., சம்பத்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரூர் கச்சேரிமேட்டில், தி.மு.க., சார்பில், தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையில், அக்கட்சியினர் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல், மொரப்பூர், கம்பைநல்லுாரிலுலும், அண்ணாதுரை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ