உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர் சரக கால்பந்து போட்டி: 16 அணிகள் பங்கேற்பு

அரூர் சரக கால்பந்து போட்டி: 16 அணிகள் பங்கேற்பு

அரூர்: அரூர் சரக அளவிலான கால்பந்து போட்டி, அரூர் சிறு விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டியை அரூர் டவுன் பஞ்., துணைத்தலைவர் தனபால், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் தலா, 6 அணிகளும், சூப்பர் சீனியர் பிரிவில், 4 அணிகளும் பங்கேற்றன. ஜூனியர் பிரிவில் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், மொரப்பூர் கொங்கு மெட்ரிக் பள்ளி, 2வது இடத்தையும் பிடித்தன. சீனியர் பிரிவில் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், மருதம் மெட்ரிக் பள்ளி, 2வது இடத்தையும் பெற்றன. சூப்பர் சீனியர் பிரிவில் மருதம் மெட்ரிக் பள்ளி முதலிடத்தையும், அரூர் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, 2வது இடத்தையும் பெற்றன. முதலிடம் பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன. நடுவர்களாக அமுல்ராஜ், பழனிதுரை, விக்டர், சுரேஷ் ஆகியோர் செயல்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ