உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / போக்சோவில் பூசாரி கைது

போக்சோவில் பூசாரி கைது

போக்சோவில் பூசாரி கைதுதர்மபுரி :தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கோவில் பூசாரி தண்டபாணி, 32. இவரிடம், பேய் பிடித்துள்ளதாக, 16 வயது சிறுமியை குணப்படுத்த அழைத்து வந்தனர். அவர் ஒரு அறைக்குள் வைத்து சிறுமிக்கு பூஜை செய்வதாக கூறி, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பெற்றோர் புகார் படி, தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் பூசாரி தண்டபாணியை நேற்று கைது செய்தனர்.அதேபோல், தொப்பூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த, 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது மாணவிக்கு சில தினங்கள் முன், உடல்நிலை பாதித்தது. மருத்துவமனையில் பரிசோதித்ததில் மாணவி கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. பெற்றோர் புகார் படி, தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் பிளஸ் 2 படிக்கும், 17 வயது மாணவன் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி