உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர் அரசு அலுவலகங்களில் கழிப்பறை வசதியின்றி அவதி

அரூர் அரசு அலுவலகங்களில் கழிப்பறை வசதியின்றி அவதி

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில், தாலுகா அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகம், சார்நிலை கருவூலம், போலீஸ் ஸ்டேஷன், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள், வங்கி, டி.எஸ்.பி., அலுவலகம், பி.டி.ஓ., அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு தினமும், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசு அலுவலகங்களில் கழிப்பறை வசதி இல்லாததால், அலுவலகத்திற்கு வரும் பெண்கள் மற்றும் முதியவர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, கச்சேரிமேட்டில் பொதுக்கழிப்பறை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ