உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாலக்கோடு: பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், உணவு பாதுகாப்பு துறை சார்பாக, நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா மற்றும் சேலம் பகுப்பாய்வு கூட முதுநிலை பொது பகுப்பாய்வாளர் நரசிம்மன் ஏற்பாட்டின் படி, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், சேலம் உணவு பகுப்பாய்வு கூட ஆய்வக இளநிலை பொது பகுப்பாய்வாளர் கார்த்திக் உள்ளிட்ட குழுவினர், உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடத்தினர். இதில், உணவு பொருட்களில் கலப்படம் கண்டறிதல், உணவு பொருள்களில் பாக்கெட் லேபில்களில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து, நேரடி செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். கல்லுாரி முதல்வர் செல்வராணி, துணை முதல்வர் ரவி தலைமையில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி