உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி கிழக்கு மாவட்ட, பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடத்துார் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் அல்லி முத்து தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் ராமலிங்கம், திருவேங்கடம், வணங்காமுடி, மாது முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அரசாங்கம் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., வேலுசாமி பேசினார். இதில் மாநில பசுமை தாயகம் அமைப்பின் தலைவர், தர்மபுரி லோக்சபா தொகுதி வேட்பாளர் சவுமியா, லோக்சபா தேர்தலில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க, வரும், 21, 22ல் வருகை தர உள்ளார். அவருக்கு கிழக்கு மாவட்டம் சார்பில், சிறப்பான வரவேற்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பா.ம.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ