டாஸ்மாக்கை மூட முற்றுகை
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அடுத்த பையர்நத்தத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூட கடந்த செப்., 27ல், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,-- கோவிந்தசாமி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகா-ரிகள், ஒரு மாதத்திற்குள் கடையை மூடுவதாக கூறினர். ஒரு மாதம் ஆகியும் கடை மூடவில்லை எனக்கூறி நேற்று மதியம், 12:00 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் அப்பகுதி பெண்கள் கடையை முற்றுகையிட்டனர். அங்கு வந்த பொம்மிடி போலீசார், பேச்சு-வார்த்தை நடத்தி, 10 நாட்களுக்குள் கடை மூடப்படும் என தெரி-வித்தனர்.இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.