உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரிவாளால் வெட்டிக்கொண்ட இருதரப்பினர் ஜி.ஹெச்.,ல் அனு-மதி

அரிவாளால் வெட்டிக்கொண்ட இருதரப்பினர் ஜி.ஹெச்.,ல் அனு-மதி

ஓசூர்: ஓசூர் அருகே காரப்பள்ளியை சேர்ந்தவர் சந்திரன், 52. விவசாயி; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 45, தரப்-பினருக்கும் இடையே, சென்னத்துாரில் உள்ள நிலம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது. நேற்று சந்திரன் மற்றும் அவரது மனைவி மாது ஆகியோர் நிலத்தில் இருந்தனர். அப்போது அங்கு வந்த கிருஷ்ணமூர்த்திக்கும், சந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டது.இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மரக்கட்டை மற்றும் அரி-வாளால் தாக்கி கொண்டனர். இதில் சந்திரன் தரப்பில், அவர் உட்-பட, 4 பேருக்கும், கிருஷ்ணமூர்த்தி தரப்பில், 6 பேருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது. ஓசூர் அரசு மருத்துவமனையில், 10 பேரும் அனுமதிக்கப்பட்டனர். ஓசூர் டவுன் போலீசில் இரு தரப்-பினரும் புகார் செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ