உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தேர்தல் நடத்தை விதிமுறையால் வெறிச்சோடிய மாட்டுச்சந்தை

தேர்தல் நடத்தை விதிமுறையால் வெறிச்சோடிய மாட்டுச்சந்தை

அதியமான்கோட்டை: அதியமான்கோட்டை காளியம்மன் கோவில், தேர் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுச்சந்தை நடந்து வருகிறது.தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில், மேல் காளியம்மன், கீழ்காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத இறுதியில், தேர்த்திருவிழாவும் அந்த சமயத்தில், மாட்டு சந்தை நடப்பது வழக்கம். இந்த ஆண்டு தேர்திருவிழா தொடங்கிய நிலையில், நேற்று மாட்டுச்சந்தை தொடங்கியது. இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து நடக்கவுள்ள மாட்டு சந்தைக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு வரும்.தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், போதிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்படும் பணம், பறக்கும் படையினரால் கைப்பற்றப்படுகிறது. இதில், மாடுகளை வாங்கவும் விற்கவும் வியாபாரிகள், விவசாயிகள் பணத்தை கொண்டு வர முடியாத நிலை உள்ளதால், மாடுகளை வாங்க பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக, அதியமான்கோட்டை மாட்டுச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ