பஸ் ஸ்டாண்டில் கூட்டம்
அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர், ஈரோடு, கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கல்லுாரிகளில் படித்து வருகின்றனர். இதேபோல், ஏரா-ளமானோர் வெளியிடங்களில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்-களில் பணியாற்றுகின்றனர். மேலும், கூலி வேலைக்காக வெளி-மாநிலங்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டி-கையையொட்டி, 4 நாள் தொடர் விடுமுறைக்கு, இவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதனால் அரூர் பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.