உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வருவான் வடிவேலன் கல்லூரி மாணவர்கள் பி.எட்., படிப்பில் சாதனை

வருவான் வடிவேலன் கல்லூரி மாணவர்கள் பி.எட்., படிப்பில் சாதனை

தர்மபுரி: பி.எட்., தேர்வில், தர்மபுரி வருவான் வடிவேலன் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால் நடத்தப்பட்ட பி.எட்., மற்றும் எம்.எட்., தேர்வில் தர்மபுரி வருவான் வடிவேலன் கல்லூரியின் இணை நிறுவனமான லஷ்மியம்மாள் கல்வியியல் கல்லுரி மாணவி வித்யா முதலிடமும், ஜனனி இரண்டாமிடமும், ராஜலட்சுமி மூன்றாமிடமும் பிடித்தனர். இதேபோல் வருவான் வடிவேலன் கல்லூரி மாணவி மனோ கல்லூரியில் முதலிடமும், ராமரஞ்சனி, உமா ஆகியோர் இரண்டாமிடமும், ரேணுகா மூன்றாமிடமும் பிடித்தனர். எம்.எட்., தேர்வில் கவிதா முதலிடமும், மாதேஷ்குமார் இரண்டாமிடமும், ஜெயக்குமார் மூன்றாமிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை கல்லூரி சேர்மன் வடிவேலன், செயலாளர் மாதவன் மற்றும் முதல்வர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை