உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அங்காளம்மன் கோவிலில் மஹாளய அமாவாசை பூஜை

அங்காளம்மன் கோவிலில் மஹாளய அமாவாசை பூஜை

காவேரிப்பபட்டணம்: காவேரிப்பட்டணம் பன்னீர் செல்வம் தெரு அங்காளம்மன் கோவிலில் மஹாளய அமாவாசை சிறப்பு பூஜை இன்று (செப்., 27) நடக்கிறது. இதையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.* தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவிலில், இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. காலை 10 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் தண்டபாணி, சக்திவேல் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.* தர்மபுரி எஸ்.வி., ரோடு ஆஞ்சநேயர் கோவில், கீழ்தெரு தாச ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ கணவாய் ஆஞ்சநேயர் கோவில், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், காரிமங்கலம் கெரகோடஅள்ளி ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Padmasridharan
ஆக 29, 2025 06:07

இப்படித்தான் நடிகை ரோஜா பவன் கல்யாண் என்ற நடிகரின் கட்சியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.


Padmasridharan
ஆக 29, 2025 06:02

இப்படித்தான் நடிகை ரோஜா பவன் கல்யாண் என்ற நடிகரின் கட்சியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.


sankar
ஆக 28, 2025 11:30

மிகவும் சிறப்பாக சொன்னீர்கள்


மேலும் செய்திகள்