உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / டவுன் பஞ்., அ.தி.மு.க., வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

டவுன் பஞ்., அ.தி.மு.க., வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

அரூர்: அரூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் காவேரி வேட்புமனுத்தாக்கல் செய்தார். அரூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் காவேரி அரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர் ராஜா ஆகியோருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று கடைவீதி வழியாக அரூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு உதவி தேர்தல் அலுவலர் நெடுஞ்செழியனிடம் காவேரி வேட்புமனுத்தாக்கல் செய்தார்.* அரூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் ஜீவரத்தினம் உதவி தேர்தல் அலுவலர் நெடுஞ்செழியனிடம் மனுத்தாக்கல் செய்தார். அவருடன் பா.ம.க., மாவட்டு துணைசெயலாளர் அன்னை முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் திருவேங்கடம், நகர செயலாளர் ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* அரூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தார். இதுவரை மூன்று பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 18 வார்டுகளுக்கு 12 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை