உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நீதிமன்றம் புறக்கணிப்பு

நீதிமன்றம் புறக்கணிப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் வக்கீல்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 'சேமநலநிதியை உயர்த்தி வழங்க வேண்டும். பயிற்சி வக்கீல்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். கீழ் கோர்ட் நீதிபதிகள் நியமனத் தேர்வில் நீதிமன்ற பணியாளர்களுக்கு பங்கேற்கலாம் என்ற நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பு நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, அரூர் நீதிமன்றங்களை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்