உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பா.ஜ., ஆர்ப்பாட்டம்

தர்மபுரி: தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகே, பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். பொது செயலாளர் சரவணன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ரங்கராஜன், விவசாய அணி மாநில துணை தலைவர் வரதராஜன் ஆகியோர் பேசினர். வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க வேண்டும். ஊழல் மிகுந்த காங்கிரஸ் கட்சி மத்திய அரசிலிருந்து வெளியேற வேண்டும், என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட நிர்வாகிகள் மாணிக்கம், ராஜேந்திரன், ஆறுமுகம், கவிதா, குமரவேல், சங்கர், மஞ்சுநாதன், ஆனந்த கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ