மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
1 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
1 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
1 hour(s) ago
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் ஆடிப்பட்ட சாகுபடி பணிக்காக விவசாயிகள் வயல்வெளிகளில் இயற்கை உரங்களை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். வயல்வெளிகளில் கடந்த காலங்களை போல் ஆட்டு பட்டி அமைத்து இயற்கை உரங்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். விவசாய நிலங்களில் அதிக அளவில் ரசாயன உரங்கள் மற்றும் மருந்துகள் அடிப்பதால், பூமியில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகள் அழிக்கப்பட்டு, மண் வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் காற்று, நீர் ஆகியவை மாசு அடைகின்றன. இதனால், தாவரங்களில் நோய் எதிர்ப்பு திறனை இழந்து மரக்கன்றுகள் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படும் உணவு தானியங்களிலும், காய்கறி உள்ளிட்ட பொருட்களிலும் மனித மெல்ல கொல்லும் நஞ்சுத்தன்மைகள் இருப்பதையும், தாய் பாலில் கூட நஞ்சு தன்மை இருப்பது பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பலரும் இயற்கை உரங்களுக்கு மாற துவங்கியிருப்பதோடு, பல ஊர்களில் இயற்கை உரங்களில் பயிர் செய்யப்பட்டு, அறுவடை செய்யப்பட்ட உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் அங்காடிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கியுள்ளது. ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால், மண்ணின் தன்மையும் கெட்டு போய் சுழ்றசி முறை விவசாயத்தில் அதிக மகசூல் கிடைப்பதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இயற்கை உரங்கள் தயாரிப்பு குறித்தும், இயற்கை உரங்களை பயன்படுத்துவது குறித்தும் விவசாயிகள் மத்தியில் வேளாண், தோட்டக்கலை துறை, வனத்துறை மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. விவசாயத்தை பிரதானமாக கொண்ட தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மானாவாரி மற்றும் இறவை பாசன மோட்டுப்பாங்கான நிலங்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக பென்னாகரம், காரிமங்கலம், தர்மபுரி பகுதியில் மேட்டுப்பாங்கான நில அமைப்புகள் மானாவாரி நிலங்கள் அதிகம் உள்ளது. இந்த நிலங்களில் காடந்த காலங்களில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் கால்நடை சாணங்கள், குப்பை கழிவுகள், வீடுகளில் பயன்படுத்தப்படும் விறகு அடுப்பு சாம்பல்கள் உள்ளிட்டவைகளை வீட்டின் புற வழிப்பகுதியில் தொட்டி அமைத்து சேகரித்து, வயல் வெளிகளில் இந்த சாண உரங்களை போட்டு நிலத்தை சீர் செய்து பயிர் செய்து வந்தனர். விவசாய வீடுகளில் குப்பை கழிவுகள் மற்றும் சாண கழிவுகள் அடங்கிய குப்பைகள் சேகரிப்பு குறைந்த நிலையில் விவசாயிகள் ரசாயன உரங்கள் பயன்பாடுத்துவதும் அதிகரித்தது. தற்போது, ரசாயன உரங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் இயற்கை உரங்கள் பயன்படுத்துவதில் அதிக அக்கரை காட்ட துவங்கியுள்ளனர். குப்பை கழிவுகள், சாண கழிவுகள் கிடைப்பது அரிதாக இருப்பதால், நிலங்களில் விவசாயிகள் ஆடு மற்றும் மாடுகள் பட்டி அமைத்து இயற்கை சாண உரங்களை வயல் வெளிகளில் பயன்படுத்தி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் ஆடிப்பட்ட சாகுபடி பணிகள் துவங்கிய நிலையில் பென்னாகரம், காரிமங்கலம், தர்மபுரி ஆகிய பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்கள் இறவை பாசன பகுதிகளில் ஆட்டுப்பட்டிகள் அமைத்து விவசாயிகள் சாணங்கள் பெறுகின்றனர். தங்கள் தேவைக்கு ஏற்ப பட்டிகளை அமைத்து கொள்ளலாம். ஒரு ஆட்டுக்கு ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேய்ச்சல் நேரங்கள் போக இரவு, பகல் நேரங்களில் வயல் வெளிகளில் அமைக்கப்படும் பட்டிகளில் ஆடுகள் அடைக்கப்படுகிறது. அதே போல் மாட்டு பட்டி அமைப்பவர்கள் இரவு நேரங்களில் வயல் வெளிகளில் மாடுகளை நிறுத்தி விடுகின்றனர். காலையில் மாட்டு சாணங்கள் வயல் முழுவதும் பரவி இயற்கை உரங்கள் வயல்வெளிகளுக்கு கிடைக்கிறது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago