உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

தர்மபுரி: தர்மபுரியில் டி.என்.சி., குரூப் நிறுவனங்கள், விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று (ஆக.,7) நடக்கிறது. காந்திநகர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் மெட்ரிக் பள்ளியில் காலை 7 மணி முதல் மதியம் 2 மணிவரை நடக்கும் முகாமில் கண் சம்பந்தமான குறைபாடுகள் கண்டறியப்பட்டு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் கண்புரை நோய் உள்ளவர்கள் அறுவை சிகிச்சைக்காக மதுரை அழைத்து செல்லப்படுகின்றனர். முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள் மணிவண்ணன், இளங்கோவன் மற்றும் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி