உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பைக் மோதி முதியவர் பலி

பைக் மோதி முதியவர் பலி

தர்மபுரி: தர்மபுரி அருகே பைக் மோதியதில், முதியவர் ஒருவர் பரிதாபமாக பலியானார். தர்மபுரி அடுத்த இண்டூர் கொனக்குளத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (70). நேற்று இண்டூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து பென்னாகரம் - தர்மபுரி சாலையை கடந்த போது, பென்னாகரத்திலிருந்து தர்மபுரி நோக்கி வந்த பைக், மாரியப்பன் மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அவரை, சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இண்டூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி