உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாவட்ட இணையதளத்தில் காலாவதியான விபரங்கள்

மாவட்ட இணையதளத்தில் காலாவதியான விபரங்கள்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட இணையத்தளத்தில் அரசு செய்திகள் மற்றும் மாவட்டம் சார்ந்த பல்வேறு புள்ளிவிபரங்கள் அனைத்தும் காலாவதியான நிலையில் உள்ளது. பல்வேறு விபரங்கள் முழுமையா பதிவு செய்யப்படாமல், கடமைக்காக இணையத்தளம் இயங்கிவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக அரசு இணையத்தளத்தில் புதிய திட்டங்கள் மற்றும் அரசாணைகள், அலுவலர்களின் குறிப்புகள் ஆகியவை வெளியிடப்பட்டு, அப்டேட் செய்யப்படுகிறது. இதே போல மாவட்டம் தோறும் உள்ள அரசு இணையத்தளத்தில் அந்தந்த மாவட்டத்திலுள்ள முக்கிய விபரங்கள் அப்டேட் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்ட இணையத்தளத்தில் பல்வேறு விபரங்களை பதிவு செய்யவும், அப்டேட் செய்யும் பணியை அந்தந்த மாவட்ட நேஷனல் இன்பர்மேடிக் சென்டர் (என்.ஐ.சி.,) செய்துவருகிறது. ஆனால், தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாவட்ட இணையத்தளத்தில் ஒவ்வொரு துறை சார்ந்த புள்ளி விபரங்கள் நீண்ட நாட்களாக அப்டேட் செய்யப்படாமல் உள்ளது. மாவட்ட புள்ளியல் துறை வழங்கும் புள்ளி விபர அடிப்படையில் என்.ஐ.சி., துறை இணையத்தளத்தில் பதிவு செய்துவருகிறது. புள்ளியில் துறை சரிவர தங்களின் புள்ளி விபரங்களை என்.ஐ.சி.,க்கு குறிப்பிட்ட காலத்துக்குள் தராமல் அலட்சியம் காட்டுவதால், இணையத்தளத்தில் புள்ளி விபரங்களின் பதிவு அப்டேட் செய்வதில்லை என என்.ஐ.சி., துறையினர் தெரிவிக்கின்றனர். தர்மபுரி மாவட்ட இணையத்தளத்தில் அனைத்து அலுவலர்களின் மொபைல்போன், பணி தன்மை ஆகியவை அப்டேட் செய்யப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை மற்றும் அறிவிப்புகள் குறித்து தினசரி இணையத்தளத்தை அப்டேட் செய்ய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை