| ADDED : ஜூலை 28, 2024 04:04 AM
தர்மபுரி: மத்திய அரசை கண்டித்து தி.மு.க., சார்பில், தர்மபுரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கிழக்கு மாவட்ட செயலர் தடங்கம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலர் பழனியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழ்நாடு சந்தித்த இரு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகிய-வற்றிற்கு நிதி கேட்டு, முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை-களை முற்றிலும், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் புறக்க-ணிக்கப்பட்டுள்ளது. இதை தர்மபுரி மாவட்ட தி.மு.க., சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் என்ற கோஷங்கள் எழுப்பி ஆர்ப்-பாட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க., எம்.பி., மணி, நகர செயலர் மாது உள்பட பலர் பங்கேற்றனர்.