உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பெண்ணிடம் அத்துமீறல் போதை நபர் கைது

பெண்ணிடம் அத்துமீறல் போதை நபர் கைது

தர்மபுரி: கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் ஸ்வேதா, 35. தன் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, தர்மபுரி டவுன் பகுதியில் நடக்கும் தனியார் கண்காட்சிக்கு சென்றார். அங்கு மது போதையில் இருந்த நபர், ஸ்வேதாவின் சுடிதார் பிடித்து இழுத்து அத்துமீறி உள்ளார். தட்டி கேட்டபோது, தர்மபுரி டவுன் பகுதியை சேர்ந்த அருண், 36, மவுலிதரன், 29, மணி, 29, தாமரைச்செல்வன், 25 ஆகியோர், ஸ்வேதாவின் உறவினரை தாக்கினர். இது குறித்து, ஸ்வேதா அளித்த புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் தாமரைச்செல்வனை கைது செய்து, தலைமறைவாக உள்ள, மூவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை