உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தனியார் துறையில் வேலைவாய்ப்பு தர்மபுரியில் இன்று முகாம்

தனியார் துறையில் வேலைவாய்ப்பு தர்மபுரியில் இன்று முகாம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது என, கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார் துறை நிறுவனங்களும், இதில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரர்களும், நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம், வாரந்தோறும், 3ம் வார வெள்ளிக்கிழமை நாட்களில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நடத்தப்பட்டு வருகிறது.ஜூலை மாதத்தின், 3ம் வெள்ளியை முன்னிட்டு, இன்று (21ம் தேதி) காலை, 10:00 மணிக்கு இம்முகாம் நடக்க உள்ளது. இதில், மார்க்கெட்டிங், சூப்பர்வைசர், விற்பனையாளர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், தட்டச்சர், அக்கவுண்டன்ட், கேஷியர், மெக்கானிக் போன்ற பல்வேறு பணிகளுக்கு, ஆட்கள் தேர்வு நடக்கவுள்ளது.இம்முகாமில், பள்ளி படிப்பு முதல் அனைத்து பட்டப்படிப்பு கல்வித் தகுதிக்கும், பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.இதன் மூலம் தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண்கள், இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ