மேலும் செய்திகள்
பா.ஜ., -- ஓ.பி.சி., அணி ஆலோசனை
2 minutes ago
தொடர் விபத்தால் மஞ்சவாடி கணவாயில் போக்குவரத்து நெரிசல்
2 minutes ago
2,929 பயனாளிகளுக்கு ரூ.31.27 கோடி கடனுதவி
23 hour(s) ago
தர்மபுரி, பாலக்கோடு அருகே, பெண்ணை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற விவசாயிக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து, தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தார்.தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே உள்ள கும்மனுார் கிராமத்தை சேர்ந்தவர் மல்லன் மனைவி வெங்கட்டம்மாள், 58. இவருடைய மகன் அருகிலுள்ள காட்டுசெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக, முன்விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த, 2021 செப்., 11ல் வெங்கட்டம்மாளின் மகன் வீட்டுக்கு நடந்து சென்றபோது, அவரை இளம்பெண்ணின் தந்தை, விவசாயி கிருஷ்ணன், 50, அரிவாளுடன் விரட்டினார். இதில் அவர் தப்பிச்சென்ற நிலையில், வீட்டு வாசலில் நின்றிருந்த இளைஞரின் தாயார் வெங்கட்டம்மாளிடம் தகராறு செய்ததுடன், அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிசென்றார்.படுகாயமடைந்த வெங்கட்டம்மாளை, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதில் குணமடைந்தார். இது தொடர்பாக பஞ்சப்பள்ளி போலீசார், கிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கிருஷ்ணன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை, 3,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி மோனிகா தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் தரப்பில், வக்கில் சக்திவேல் ஆஜரானார்.
2 minutes ago
2 minutes ago
23 hour(s) ago