உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சிறுமி கற்பழிப்பு; மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சிறுமி கற்பழிப்பு; மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி: புதுவையில் சிறுமி கற்பழிப்பு சம்பவத்தைக் கண்டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ஜெயா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மல்லிகா முன்னிலை வகித்தார். சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.மாவட்ட துணைத் தலைவர் பூபதி, நகர செயலாளர் நிர்மலாராணி, நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, தமிழ்மணி, மீனாட்சி, ரங்கநாயகி, சுசீலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை